இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் எப்போதும் அப்டேட் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா முன் முயற்சியின் எனது ஆதார் போர்டலில் இலவச ஆவண புதுப்பிப்பு சேவையை பெறுமாறு UIDAI மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. https://myaadhar.uidai.gov.inஎன்ற இணையதளத்தில் மூலம் தங்களது முக்கியமான மற்றும் திருத்தப்பட்ட ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக பதிவேற்றம் செய்யலாம். இதில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.