வேல்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.1 கோடி உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து விட்டு, படத்தை முடிக்கவில்லை, வேறு படங்களில் நடிக்க சிம்புக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் மனு அளித்துள்ளது.

இதனை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், செப்டம்பர் 19க்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் வேறு படங்களில் நடிக்க சிம்புக்கு தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.