தமிழ் சினிமாவில் குறைந்த அளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் விஷால். இவர் இன்று தன்னுடைய 46வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் விஷால் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தார். அது மட்டுமல்ல அங்குள்ள இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தியதோடு குழந்தைகளுக்கு அவர் உணவு ஊட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் விஷாலின் இந்த செயலை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.