தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ சங்கர். இவர் முதலில் மிமிக்ரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நிலையில் அதன் பிறகு கலக்கப்போவது யாரு மற்றும் அசத்தப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் பலவிதமான குரல்களில் பேசி அசத்தி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு தான் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்த நிலையில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகின்றார். இவர் சமீபத்தில் உடல் எடை மெளிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா பிகில் மற்றும் விருமன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. செல்ல உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இன்னும் சில மாதங்களில் திருமணம் என கூறிக் கொண்டிருந்த இந்திரஜா தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்திரஜா மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் எடை குறைப்பு முயற்சிகளும் தற்போது இறங்கியுள்ளனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

INDRAJA SANKAR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indraja_sankar17)