கோயம்புத்தூரில் பாஜக எம்.பி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் விஸ்வகர்மா திட்டத்தால் சமூக நீதி பாதிக்கப்படும் என்று பொய் சொல்லி தமிழகத்தில் லட்சக்கணக்கான கைவினை கலைஞர்களின் வாழ்க்கையை முடக்க பார்க்கிறார். விஸ்வகர்மா திட்டத்தினால் பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று அவர்களுக்கு வயித்தெரிச்சல்.

அதனால் தான் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். சமூக நீதிக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே ஒரு கட்சி திமுக தான் என்றார். விஸ்வகர்மா திட்டம் காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்களில் கூட செயல்படுத்தப்பட்டு சிறப்பாக இருக்கிறது. காவி என்பதே சீமான் தத்துவத்துக்கு இணையாக பேசும் நிலையில் காவி என்பது பாஜகவுக்கு சொந்தமான நிறம் கிடையாது.

அது இந்த நாட்டின் பாரம்பரியம், சனாதன தர்மம் மற்றும் தியாகம் போன்ற உயர்ந்த நிலையை காட்டுகிறது. இதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் அரசியலில் தான்தான் சூப்பர் ஸ்டார் என்று அவர் கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அரசியலில் தான்தான் சூப்பர் ஸ்டார் என்று தங்களுக்கு தங்களே பட்டம் சூட்டிக்கொள்ளக் கூடாது.

நாட்டில் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று புதிய கௌரவத்தை தேடிக்கொடுத்த மோடி தான் உண்மையாகவே அரசியல் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். மேலும் முன்னதாக நடிகர் ரஜினி சீமான் சந்தித்தபோது அது தொடர்பாக பேசிய சீமான் அவர் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நான் அரசியல் சூப்பர் ஸ்டார். இரண்டு சூப்பர் ஸ்டாரர்களும் ஒன்றாக சேர்ந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி கதறுறாங்க என்று கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் பிரதமர் மோடி தான் உண்மையான அரசியல் சூப்பர் ஸ்டார் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.