சமந்தாவும்  விஜய்  தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் அவர் லிவிங் டுகெதர்-ல் உள்ளதாக தகவல்  தீயாக இணையத்தில் பரவியதையடுத்து அடுத்தடுத்து போலியான தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் நடிகை ரஷ்மிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக உலா வரும் தகவல்களை நடிகர் விஜய் தேவரகொண்டா திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து காட்டமாக பேசியிருக்கும் தேவரகொண்டா, “நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று ஒவ்வொரு ஆண்டும் ஊடகங்கள் பொய் செய்தி வெளியிடுகின்றன. இந்த வதந்திகள் மூலம் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.