பொதுவாக வீட்டில் ஒரு சில பொருட்களை வாஸ்துபடி வைத்தால் தான் அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்பார்கள். ஒரு வீட்டின் ஒழுங்கு வாஸ்துபடி இல்லாவிட்டால் வாழ்வில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இப்படியான ஒரு நிலை ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் வீட்டில் வைக்கும் பொருட்களை சரியான திசையில் வைப்பது சிறந்தது. அந்த வகையில் ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் வைத்திருப்பது நல்லது என்று பலரும் கூறுவார்கள். ஆனால் அதை எந்த இடத்தில் வைத்தால் நன்மை கிடைக்கும் என்பது தெரியாமல் இருப்பார்கள்.

அதன்படி ராமர் பட்டாபிஷேக போட்டோவை வீட்டில் வைக்கும் போது சில முக்கியமான விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ராமர் பட்டாபிஷேகம் புகைப்படத்தை வீட்டில் வைப்பது தான் நேர்மறையான ஆற்றல் உருவாகி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். இந்துக்களின் கடவுள் என அழைக்கப்படும் ராமர் நல்ல மகன், கணவன் மற்றும் ராஜாவிற்கும் முன்மாதிரியாக கருதப்படுகிறார். பழங்கால வாஸ்துக்களின் படி போட்டோவை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளை பார்த்தவாறு வைப்பது நல்லது. ஏனென்றால் இந்த திசைகள் நேர்மறை ஆற்றலை கொடுக்கின்றன.