தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசிய போது, மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பை வழங்கியுள்ளார்கள். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற போராடுவேன் என்றார். ராதிகா பேசிக் கொண்டிருந்தபோதே தொண்டர் ஒருவர் வெற்றி வேட்பாளர் ராதிகா என சொல்ல, மற்றொருவர் ராதிகா சரத்குமார் என கூறுமாறு வலியுறுத்தினார்.