தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று ராணிப்பேட்டை ஒழுகூர், சிப்காட் மற்றும் வாலாஜா ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

இதனால்  ராணிப்பேட்டை நகரம், நாவல்பூர், பாரதி நகர், காரை, சிப்காட், புளியங் கண்ணு, பெரியார்நகர், அக்ரவாரம், பெல், சிட்கோ, புளியந்தாங்கல், வானபாடி, செட்டித்தாங்கள், அண்ணா நகர், எடப்பாளையம், தண்டலம், அம்மூர் பஜார், வாலாஜா நகரம், வன்னி மேடு, அம்மணந்தாங்கல், வீ.சி.மேட்டூர், குடிமல்லூர், தேவதானம், டி.கே.தாங்கல், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, செல்லியப்பாநகர், சென்னசமுத்திரம். ஆனந்தலை, வளவனூர், எசையனூர், முசிறி, வள்ளுவபாக்கம், ஒழுகூர், செங்காடு, மோட்டூர், ஜி.சி.குப்பம், வாங்கூர், கரடிகுப்பம், தலங்கை, செங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை ஏற்படும் என கூறப்படுகிறது.