தமிழக அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு நெகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மூத்த அரசியல்வாதியான கே.ஏ.செங்கோட்டையன் அமைச்சராகப் பதவியேற்க மேடைக்கு வந்தார்.

அப்போது, மரபுப்படி எழுந்து நின்று மரியாதை கொடுத்த முதலமைச்சர் விஜய், அருகில் இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் செங்கோட்டையனின் அரசியல் அனுபவம் குறித்தும், அவரது சீனியாரிட்டி குறித்தும் மிகவும் புகழ்ந்து பேசியது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஒரு புதிய முதலமைச்சராக இருந்தாலும், அனுபவத்திற்கு மதிப்பு கொடுத்து ராகுல் காந்தியிடம் ஒரு மூத்த தலைவரைப் பெருமையாக அறிமுகப்படுத்திய விஜய்யின் இந்தச் செயல், அரசியல் நாகரிகத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.

“>

 

இந்த ‘க்யூட்’ ஆன வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, “தளபதியோட இந்த குணம் தான் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு” எனத் தொண்டர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.