ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்தப் போரினால் உக்ரைனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு மீதமுள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வேறு நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்தப் போரில் உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல ராணுவ உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றது. மேலும் ரஷ்யாவிற்கு எதிராக அந்நாடுகள் பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. ஆனால் இதனை ரஷ்யா கண்டுகொள்ளாமல் போரில் முன்னேறி செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் போர் குறித்து ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளனர். அதில் “ரஷ்யா உக்ரைனின் மீது போர் தொடுத்ததில் இருந்து இதுவரை 7199 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் ஆவர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து உக்ரைனில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஊழியர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அங்கு நடக்கும் இறப்புகளை தொடர்ந்து கணக்கிட்டு வருகிறார்கள். அவர்கள் கூறியதாவது “கணக்கெடுப்பு இவ்வளவு தான் என்றாலும் கணக்கிட முடியாத இறப்பின் விகிதம் என்னும் அதிகமாகவே இருக்கும்” என கூறியுள்ளனர்.