முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள். ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பது வேலையே பயிரை மேய்வது போன்றதாகும். இந்த செயலை செய்த அமைச்சர் நாசருக்கு கடும் கண்டனங்கள். அதன் பிறகு அரசு ஊழியர்கள் செய்ய வேண்டிய பணிகளை திமுகவினர் செய்வது, வாக்களித்த மக்களை அமைச்சர்களே கொச்சைப்படுத்துவது, மனுக்கள் கொடுக்க வரும் மக்களை அமைச்சர்கள் அடிப்பது, கவுன்சிலரை அமைச்சர் அடிப்பது, அரசு அதிகாரிகளை மிரட்டுவது மற்றும் தற்போது ஒரு ரவுடி போன்று ஒரு அமைச்சரே கல்லை வீசி எறிந்தது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சகட்டம்.

திருவள்ளுவர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் இடத்தில் நாற்காலிகள் போடாததால் ஆத்திரத்தில் ஒரு அமைச்சரான என்பதையும் மறந்து கல்லை வீசி எரிந்துள்ளார் அமைச்சர் நாசர். இந்த செய்தி பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளிவந்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் உள்ளவர்களின் செயல்பாட்டால் தன்னுடைய தூக்கமே போய்விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் கட்சியினர் இப்படி செயல்படுவது அவரை மதிக்கவில்லை என்பதற்கு அர்த்தம். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேறொன்றுமில்லை என்பதுதான் மக்களின் கருத்து என்று கூறியுள்ளார்.