தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரவி மோகன் இயக்குனர் கணேஷ் பாபுவுடன் சேர்ந்து தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாக இருந்தார். இந்நிலையில் திடீரென இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் படத்தில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதில் சாம் சி எஸ் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் திடீரென படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.