இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள் என ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் ஏராளமானோர். நீண்ட தூர ரயில்களை விட புறநகர் ரயில்கள் எப்போதும் பிஸியாக இருக்கும். உதாரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் லோக்கல் ட்ரெயின் சேவை என்பது மிகவும் பரபரப்பானது டிக்கெட் செலவு குறைவு. மேலும் வேகமாக பயணிக்கலாம் என்பதை தாண்டியும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்காகவே நிறைய பேர் லோக்கல் ட்ரெயின் சேவை பயன்படுத்தி வருகின்றனர்.

ரயில் நிலைய பயண சீட்டு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி முடங்கியது. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயண சீட்டை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் 284 ரயில் நிலையங்களில் தானியங்கி பயண சீட்டு இயந்திரங்களை நிறுவ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை கோட்டத்தில் 96, மதுரை கோட்டத்தில் 46, திருச்சி கோட்டத்தில் 12, சேலம் கூட்டத்தில் 12, திருவனந்தபுரம் கோட்டத்தில் 50 மற்றும் பாலக்காடு கோட்டத்தில் 384 தானியங்கி பயண சீட்டுகள் நிறுவப்பட்டுள்ளது. தற்போது திருச்சி கோட்டத்தில் 7, மதுரை கோட்டத்தில் 16, சென்னை கோட்டத்தில் 34, சேலம் கோட்டத்தில் 13, பாலக்காடு கோட்டத்தில் 15, திருவனந்தபுரம் கோட்டத்தில் 14 என 99 ரயில் நிலையங்களில் தானியங்கி பயண சீட்டு இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.