இந்தியாவில் அதிக அளவில் மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் அவர்களின் டிக்கெட் கிடைக்காமல் இருந்தால் RAC டிக்கெட் வழங்கப்படும். இந்த டிக்கெட் முழு சீட்டு கிடைக்காமல் இருந்தாலும் அவர்கள் ரயிலில் ஏற உரிமை வழங்குவதாக தான் அர்த்தம். இந்த சீட்டு கிடைத்த இருவர் பக்கவாட்டு லோயர் பெர்த்தில் சீட்டை பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பயணிகளுக்கு நடுவே வாக்குவாதம் நடைபெறுவதால் ரயில்வே வாரியம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதன்படி இது போன்ற பயணிகளின் தேவையை கருதி ஏசி வகுப்பில் பயணிக்கும் RAC பயணிகளுக்கு போர்வை, பெட்ஷீட் மற்றும் துண்டு உள்ளிட்ட முழுமையான பெட் ரோல் கிட், தலையணைகள் வழங்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ஏசி வகுப்பில் பயணம் செய்வதற்கு RAC பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஏற்கனவே அதற்கான கட்டடம் சேர்க்கப்பட்டுள்ளதால் ரயில்வே வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.