இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பெட்டியின் கீழ் பெர்த்ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே முக்கிய முடிவை எடுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்கு ரயிலின் கீழ் பெர்த் வழங்கப்படும்.

அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது. ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், மூன்றாம் வகுப்பு ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்கள் அவருடன் பயணம் செய்பவர்கள் இதில் அமர முடியும். இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டி இருக்கும்.

இதனைத் தவிர மூத்த குடிமக்களுக்கு அதாவது பெரியவர்களுக்கு அதற்காக இந்திய ரயில்வே லோயர் பெர்த்தை வழங்கியுள்ளது. அதாவது ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 கீழ்ப் பெர்த்கள், மூன்றாம் வகுப்பு ஏசி கோச்சில் நான்கு முதல் ஐந்து கீழ் பெர்த், இரண்டாவது ஏசி பெட்டியில் நான்கு லோயர் பெர்த் ஆகியவை 45 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது.