நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான, மருந்து – மாத்திரைகளும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போலியான மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதை தடுக்கவும், மருந்துகளின் தரத்தை உறுதி செய்யவும் மத்திய மருந்து தர கட்டுப்பட்டு வாரியம் கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டது

இந்நிலையில் போலி மருந்துகளை தடுக்கும் வகையில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 300 மருந்துகளின் அட்டைகளில் பிரத்யேகமான க்யூ.ஆர்., கோடு அல்லது பார் கோடு அச்சிடும் நடைமுறை ஆக.1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. அட்டைகளிலுள்ள க்யூ.ஆர்., கோட்டை ஸ்கேன் செய்யும்போது, மருந்துகளின் உட்கூறுகள் விவரம், தயாரிப்பாளர் விவரம், உற்பத்தி, காலாவதி தேதி உட்பட அனைத்து விவரங்களையும் அறிய முடியும்.