இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 13 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 14 ஆவது தொகையையும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 14ஆம் தவணைக்கான தொகையான 2000 ரூபாய் இன்று  வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 8.5 கோடி பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.