
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே சார்பில் பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. கைகளில் பயணம் செய்ய முன்கூட்டியே புக்கிங் செய்வது அவசியம். நீங்கள் குடும்பமாக ரயிலில் பயணம் செய்யும்போது வெவ்வேறு இடங்களில் இருக்கைகள் ஒதுக்கப்படாது என்று நினைப்போம். ஆனால் அதற்கு ஒரு வழி உள்ளது. திருமணம் அல்லது வேறு ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்தால் நீங்கள் ஒரு பெட்டியில் 50 அல்லது 60 இருக்கைகள் புக்கிங் செய்ய வேண்டும்.
அப்படி என்றால் ரயில்வேயின் முழு கட்டண விகித வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இந்திய ரயில்வே விதிகளின் படி முழு ரயிலையும் முன்பதிவு செய்ய நினைத்தால் குறைந்தது 18 பெட்டிகளை முன் பதிவு செய்யலாம். அதனைப் போலவே அதிகபட்சமாக 24 பெட்டிகளை முன் பதிவு செய்ய முடியும். மேலும் ஒரு கோச் முன்பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.
இந்த வசதியை நீங்கள் ஆன்லைனில் பெற முடியும். ரயில் தொடங்கும் இடத்திலிருந்தும் முன் பதிவு செய்து கொள்ளலாம். ரயில் பெட்டிகளை எவ்வளவு தூரம் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பதிவு செய்ய அல்லது அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு முன்பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் 7 நாட்கள் வரையிலான பயணத்திற்கு ஒரு கோச் முன்பதிவு செய்தால் 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு நாளைக்கு கூடுதலாக பத்தாயிரம் ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும்.