கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தண்ணீர் இல்லை என கர்நாடக மாநில நீர் வளத்துறை அமைச்சர் டிகே சிவகுமார் கூறியிருக்கிறார்.

தமிழகத்திற்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கடந்த 15 நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து காவேரி மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன  விதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டதன்  அடிப்படையில் கடந்த 15 நாட்களாக 5,000 கன அடி  தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டமானது பிற்பகல் 2:30 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதனிடையே இந்த கூட்டத்தில் கர்நாடகாவின் நிலைப்பாடு என்ன ?  என்பது குறித்து செய்தியாளரிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார்,  தற்போதைக்கு அணையில் எவ்வளவு தண்ணீர் இருந்ததோ, அது முழுவதுமாக திறக்கப்பட்டு விட்டது. இனி திறப்பதற்கு தண்ணீர் இல்லை.

தற்போதுள்ள தண்ணீர் கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இருக்குமா என்ற ஒரு சந்தேகம் இருந்துள்ளதாகவும்,  குடிநீர் தேவையை புறக்கணித்துவிட்டு, விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைய கூட்டத்தில் கூட இதை தான் கர்நாடக மாநிலத்தின்  நிலைப்பாடாக முன்வைப்போம். ஏனென்றால் அவர்கள் நேரில் வந்து பார்த்துக் கொள்ளட்டும். தற்போதைக்கு தமிழகத்திற்கு திறப்பதற்கு தண்ணீர் இல்லை என்ற விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த விஷயத்தில்  அரசியல் ஏதும் கிடையாது, மழை வந்தால் நாங்கள் தண்ணீர் திறந்து விடுவோம். ஏற்கனவே திறந்து விட்டிருக்கும் தண்ணீரால் கர்நாடகாவிற்கு குடிநீர் பஞ்சம் ஏற்படுமா என்ற சூழல்தான் உருவாக்கியிருக்கிறது. எனவே இனி தண்ணீர் திறக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக  தெரிவித்துக்கொள்கிறார். இதே நிலைப்பாட்டை தான் காவேரி மேலாண்மை ஆணையத்திலும் கர்நாடக சார்பில் முன்வைக்க உள்ளதாகவும் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.