டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார். மாசு வரி என்ற பெயரில் 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் டீசல் வாகனம் மீதான பயன்பாடு அதிகமாக இருக்கும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி “2014க்கு பிறகு 52% (எண்ணிக்கை) டீசல் வாகனங்கள் 18% ஆக குறைந்துள்ளது. தற்போது ஆட்டோமொபைல் துறை வளர்ந்து வருவதால் டீசல் வாகனங்கள் அதிகரிக்கக்கூடாது. டீசல் (வாகனம்) குறைக்கப்பட வேண்டும் என்று உங்கள் மட்டத்தில் நீங்கள் முடிவெடுக்கிறீர்கள். அது நடக்கவில்லை என்றால், டீசல் அதிக மாசுபாட்டை உருவாக்குகிறது, எனவே அதற்கு 10% கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சருக்கு நான் பரிந்துரைக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.