ஸ்விட்சர்லாந்தில் உள்ள ரயில் நிலையங்களில் நேற்று மாலை 5 மணி முதல் அறிவிப்பு பலகைகள் திடீரென வேலை செய்யாமல் போனதாகவும் மேலும் சில பலகைகள் தவறான தகவல்களை காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்தப் பிரச்சனை ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பயணிகளுக்கு அறிவிப்பு ஒன்று வந்தது. அதில் “பயணிகள் ரயில்கள் குறித்த தகவலை பெறுவதற்கு தங்களின் தொலைபேசியில் உள்ள ஆப்களை பயன்படுத்த வேண்டும். இந்த பிரச்சனை ஏற்பட்டதற்கு காரணம் ஓவர் லோட் தான். மேலும் இது விரைவில் சீர் செய்யப்படும்” என்று சுவிஸ் பெடரல் ரயில்வே ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த பிரச்சனை இரவு 8 மணிக்கு ஸ்விஸ் பெடரல் ரயில்வே ஊழியர்களால் சரி செய்யப்பட்டுள்ளது.