பிரான்ஸ் நாட்டில் கடந்த 1959 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் மழை காலத்தில் வறட்சி நிலவி வருகின்றது. கடந்த 31 நாட்களாக அந்நாட்டில் மழை பெய்யாததால் தண்ணீர் பயன்பாடு குறித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரான்ஸ் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சரான Christophe bechu கூறியதாவது “நாட்டின் ஒவ்வொரு பகுதியம் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கின்றது.

மேலும் இப்போதே தண்ணீரை சேமிக்க பழகிக் கொள்ளுங்கள். குறிப்பாக நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்புதல், கார் கழுவுதல் போன்றவற்றை கவனமாகவும், சிக்கனமாகவும் கையாள வேண்டும். மேலும் அடுத்த சில நாட்களில் தண்ணீர் குறித்து பெரிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. அதில் நல்ல தண்ணீரை கழிவறைக்கு பயன்படுத்துவதற்கு பதிலாக இனி மழை நீரை பயன்படுத்த அனுமதி வழங்கப்படலாம். ஆகவே மக்கள் எச்சரிக்கையுடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.