ரயில் நிலைய பயண சீட்டு மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு தானியங்கி இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பின் போது இந்த வசதி முடங்கியது. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயண சீட்டை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் 284 ரயில் நிலையங்களில் தானியங்கி பயண சீட்டு இயந்திரங்களை நிறுவ முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை கோட்டத்தில் 96, மதுரை கோட்டத்தில் 46, திருச்சி கோட்டத்தில் 12, சேலம் கூட்டத்தில் 12, திருவனந்தபுரம் கோட்டத்தில் 50 மற்றும் பாலக்காடு கோட்டத்தில் 384 தானியங்கி பயண சீட்டுகள் நிறுவப்பட்டுள்ளது. தற்போது திருச்சி கோட்டத்தில் 7, மதுரை கோட்டத்தில் 16, சென்னை கோட்டத்தில் 34, சேலம் கோட்டத்தில் 13, பாலக்காடு கோட்டத்தில் 15, திருவனந்தபுரம் கோட்டத்தில் 14 என 99 ரயில் நிலையங்களில் தானியங்கி பயண சீட்டு இயந்திரங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.