சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியின் இலக்குகள் பெரிதாக இருப்பதால் முயற்சியும் பெரிதாக மேற்கொண்டு வருகிறோம். மேலும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை வகுத்து வெளியிட்டு இருக்கிறோம். இந்நிலையில் குடிசையில்லா  நகரத்தை உருவாக்கும் முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

குடிசை இல்லா நகரங்களை உருவாக்கிட வேண்டும். தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதனால் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் வருவாய் குறைவாக உள்ள மக்களுக்கு வீட்டு வசதி கழகத்தின் சார்பில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டு 1.90 கோடியாக இருந்த நகர மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டில் 3.41 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது வருகிற 2031 ஆம் ஆண்டு 5.31 கோடியாக அதிகரிக்கும். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் ஏற்படுத்தும் விதமாக அரசு செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.