இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது உங்களின் ரயில் டிக்கெட் வேறு ஒருவருக்கு மாற்றக்கூடிய ஒரு விதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உங்கள் ரயில் டிக்கெட்டை குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு மாற்றலாம். சில நேரத்தில் அவசிய பணிகள் காரணமாக நம்மால் திட்டமிட்டபடி பயணங்களை மேற்கொள்ள முடியாமல் போனால் நமது டிக்கெட்டை வேறு ஒருவரது பெயரில் மாற்ற முடியும். இதற்கு முதலில் நீங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்குச் சென்று ரயில் டிக்கெட் யாருடைய பெயரில் மாற்ற விருப்பம் கொள்கிறீர்களோ அந்த நபரின் ஐடி அல்லது ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். டிக்கெட் பரிமாற்ற விண்ணப்ப படிவத்துடன் இந்த ஐடியை சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பாக கோரிக்கை விடுக்க வேண்டும்.

அதனைப் போலவே பண்டிகை சமயங்களில் திருமண விழாக்கள் அல்லது தனிப்பட்ட விஷயங்களில் ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தனிநபர்கள் டிக்கெட் பரிமாற்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இந்திய ரயில்வே விதியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது ஒரு முறை மட்டுமே ரயில் டிக்கெட் நீங்கள் வேறு பெயருக்கு மாற்ற முடியும். உங்கள் டிக்கெட்டை மற்றொருவர் பெயரில் மீண்டும் மீண்டும் மாற்ற இயலாது.