
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெங்கலபொட்டல் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் (39) என்ற மகன் இருக்கிறார். இவர் திருநெல்வேலியில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த இளம் பெண் சம்பவ நாளில் நிலைக்கு ஒரு ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அப்போது சுபாஷிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை கூற அவர் ஒரு ஹோட்டலுக்கு வருமாறு இளம்பெண்ணை அழைத்தார். அங்கு இளம் பெண்ணுக்கு மதுபானம் வாங்கி சுரேஷ் கொடுத்த நிலையில் குடித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு சென்றனர்.
தன்னுடைய வீட்டிற்கு பெண்ணை சுபாஷ் அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவருடைய நண்பரான முருகேஷ் (37) என்பவர் வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் அவர்களிடமிருந்து தப்பி ஓட முயன்ற நிலையில் அவர்கள் அந்த பெண்ணை ஒரு அறைக்குள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து வந்த இளம் பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சுபாஷ் மற்றும் முருகேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.