
தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். பேருந்து, விமானத்தை விட ரயில்களில் தான் அதிகமாக பயணம் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு, வேகமாகவும் பயணம் செய்யலாம். இந்நிலையில் ரயிலில் ஏதேனும் இருக்க இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். ஏதேனும் இருக்கை காலியாக இருந்தால் அந்த இருக்கையை நமக்கு தருமாறு டிக்கெட் பரிசோதகரிடம் கேட்பார்கள். ஆனால் இனி கேட்க தேவையில்லை.
ஏனெனில் பயணத்தின் போது ரயிலில் எந்த பெட்டியில் எந்த இருக்கை காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். உறுதிப்படுத்தப்பட்ட இருக்காய் இல்லாவிட்டாலும் ரயிலில் காலியாக உள்ள இருக்கை பற்றி எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியின் உதவியை பெற முடியும். IRCTC இணையதளத்தின் முதன்மைப் பக்கத்திற்குச் சென்று https://www.irctc.co.in/nget/train-search மற்றும் Book Ticket விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
அங்கு காலியான சீட் மற்றும் சார்ட் என்ற விருப்பம் தெரியும். அதைக் கிளிக் செய்தவுடன், முன்பதிவு சார்ட் உங்கள் முன் தோன்றும். அடுத்து, முதல் பெட்டியில் ரயில் பெயர் அல்லது ரயில் எண்ணையும், இரண்டாவது பெட்டியில் போர்டிங் ஸ்டேஷனின் பெயரையும் உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, Get Train Chart என்பதைக் கிளிக் செய்தவுடன், காலியாக உள்ள இருக்கைகளின் சமீபத்திய நிலை திரையில் தோன்றும். இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் .