டெபிட் கார்டு கிரெடிட் கார்ட்  தொடர்பான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய மாற்றமானது அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதாவது வாடிக்கையாளர்களுடைய சேவைக்கு ஏற்ப வங்கி சேவை வழங்குனரை தேர்வு செய்ய வேண்டும். வங்கிகள் தங்களுடைய விருப்பப்படி எந்த சேவை வழங்கினரிடம் இருந்தும்  கார்டை  பெற்று வாடிக்கையாளருக்கு வழங்கக் கூடாது எனவும் அறிவித்துள்ளது.

இதுபோல வங்கிகள் இடம் இருந்து கார்டை பெற்று வாடிக்கையாளருக்கு வழங்கினால் வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சேவை வழங்குனரின் பெயரை தாங்களே முடிவு செய்யலாம். பழைய வாடிக்கையாளர்கள் தங்களுடைய டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை புதுப்பிக்க நினைத்தால் சேவை வழங்குநரை தேர்ந்தெடுக்கும் விருப்பமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவுறுத்தி உள்ளது.