தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு தீபாவளி பண்டிகையில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 7:00 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க கிட்டத்தட்ட 2 மணி நேரம் அனுமதி கொடுத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது காற்று மாசுபாடு ஏற்பட கூடும் என்பதால் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ரயில்வே பயணிகளுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டாசுகள் எளிதில் வெடிக்க கூடிய பொருள் என்பதால் அதனை ரயில்களில் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. மேலும் இதனை மீறி ரயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்பவர்களுக்கு ‌ரூ.1000 அபராதமும், 3 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. அதோடு கேஸ் சிலிண்டர், அமிலங்கள் மற்றும் கேஸ் அடுப்பு போன்றவைகளையும் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.