இந்தியாவைப் பொறுத்த வரையில் ரயிலில் அடிபட்டு உயிரினங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. ரயில் பாதையை கடந்து செல்லும் யானைகளின் மீது ரயில் மோதி யானைகள் பரிதாபமாக உயிரிழப்பதை தடுத்து நிறுத்த எந்த ஒரு தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. தினமும் ஏதாவது ஒரு உயிர் போய்க் கொண்டு தான் இருக்கிறது. அதன்படி அசாமில் விரைவு ரயில் மோதி யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் யானை மீது அந்த வழியாக வந்த கஞ்சன் ஜங்கா ரயில் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானை நடக்க முடியாமல் தடுமாறி தண்டவாளத்திலேயே விழுந்து உயிரிழந்தது. அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

 https://video.twimg.com/ext_tw_video/1811265047454240768/pu/vid/avc1/354×640/SYw9WnV9nUAC2iVU.mp4?link=vimeo.com