இந்தியா மாலத்தீவு பிரிவினையை மேலும் வலுக்கும் வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள விஜய் மிஸ்ராவிற்கு சொந்தமான மிஸ்டர், பட்டூரா என்ற உணவகத்தில் நூதன இலவச சலுகை ஒன்றை அறிவித்துள்ளனர். மாலத்தீவிற்கு செல்ல வாங்கப்பட்ட விமான பயணச்சீட்டை ரத்து செய்த பிறகு அந்த பயண சீட்டுக்கு வட இந்தியாவின் பிரபல உணவான சோலே பட்டூரே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என உணவக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்லும் முன்பை ஏற்படுத்துவதே நோக்கம் என தெரிவித்துள்ளனர். இந்த சலுகையை அதிகரிக்கும் வரவேற்பை தொடர்ந்து மேலும் இவர்களது உணவாகக் கிளைகளுக்கும் அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்துள்ளனர்.