தமிழ் சினிமாவில் புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி தற்போது மைக்கேல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக திவ்யங்கா கௌஷிக் நடித்துள்ள நிலையில், கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனுசியா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மைக்கேல் படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைரை நடிகர் ஜெயம் ரவி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். மேலும் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் உடன் வெளியாகி உள்ள மைக்கேல் படத்தின் டிரைலர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து டிரெண்டாகி வருகிறது.