
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆனது 17 வருடங்களுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் தோற்றுவிட்டது. இந்த ஆட்டத்தில் தோனி ஒன்பதாவது வீரராக களமிறங்கி 16 பந்தில் மூன்று பவுண்டரி அடித்த்து 30 ரன் எடுத்தார். ஆனால் அவர் முன்பே களமிறங்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. அஸ்வினுக்கு முன்னதாக கூட தோனி ஆடாதது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தோனி முன்னதாகவே களமிறங்க வேண்டும் என்று டெல்லி வர்ணனையாளரும், சிஎஸ்கே வின் முன்னாள் வீரருமான ஷேன் வாட்சன் கூறியுள்ளார். அதாவது,” RCB க்கு எதிராக தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதை பார்க்கவே சிஎஸ்கே ரசிகர்கள் வருகிறார்கள்.
எனவே தோனி முன்பே இறங்கி ஆடியிருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ஆட்டத்தில் அஸ்வினுக்கு முன்பாகவே தோனி களமிறங்கி இருக்க வேண்டும். கூடுதலாக 15 பந்துகளை அவர் சந்தித்திருக்க வேண்டும். அவர் தொடர்ச்சியாகவே தன்னால் திறமையாக விளையாட முடியும் என்று நிரூபித்து வருகிறார். அவரது திறமையை அதிகம் வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். தற்போதைக்கு சிஎஸ்கே அணியில் சமநிலை இல்லை. டோனி விக்கெட் கீப்பில் சிறப்பாக இருக்கிறார். அவரை முன்னதாக இறக்கி இருந்தால் வென்று இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.