ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டம் வருகின்ற 28ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது.

அதன்படி இன்று காலை 10:40 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்க இருக்கிறது. இந்த டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  அதன்பிறகு ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே கிடைக்கும். மேலும் ரூ‌.1,700, ரூ.2,500, ரூ.3500, ரூ.4000, ரூ.6000 ஆகியவிலைகளில் டிக்கெட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.