ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள், பிரபல சமூக வலைதள இன்ப்ளூயன்சர் ஸ்வேதா பண்டிரை கடந்த பிப்ரவரி 4-ம் தேதி ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், இரு வீட்டாரும் நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்வேதா பண்டிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இணைந்து இருக்கும் வீடியோவைப் பகிர்ந்து இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார், ஆனால் யாஷ் தயாள் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.கடந்த ஆண்டு பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த யாஷ் தயாள், இந்த ஆண்டும் அந்த அணிக்காக விளையாட தீவிரமாகத் தயாராகி வருகிறார்.
சுமார் 5.8 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்ட ஸ்வேதாவுடனான இவரது திடீர் திருமணம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
