கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள ஹோசநகர் பகுதியில் நிகழ்ந்த விபத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பலேனோ கார், சாலையில் திருப்பம் ஒன்றை நெருங்கும்போது, வேக கட்டுப்பாட்டை இழக்கிறது. சாலையின் நடுவில் சறுக்கி, நேரடியாக சாலையோரத்தில் உள்ள குளத்தில் கவிழ்கிறது. இந்த காட்சியை அருகிலிருந்த ஒருவர் மொபைல் கேமராவில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
விபத்தை பார்த்தவர்கள் கூறுவதாவது, “ஓட்டுநர் ப்ரேக் போட்டபோது அல்லது திருப்ப முன்றபோது கட்டுப்பாட்டை இழந்திருக்க வேண்டும்.” அதே நேரத்தில், மற்றொரு வாகனம் எதிரே வந்திருந்தால், அல்லது பாதசாரிகள் சாலையில் இருந்திருந்தால், விபத்தின் தாக்கம் பேரழிவாக இருந்திருக்குமென அவர்கள் கூறுகின்றனர். கார் குளத்தில் விழுந்ததைக் கண்டதும், அருகிலிருந்த கிராம மக்கள் உடனே ஓடிவந்து உதவினர். அதிர்ஷ்டவசமாக, கார் முழுவதுமாக மூழ்குவதற்கு முன்னே ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறக்கப்பட்டதால், அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
Hosanagara, Shivamogga, Karnataka ⚠️
Speed limit here is 40–45 kmph.
A Baleno was overspeeding (almost double), lost control on a curve, and went off the road. pic.twitter.com/xnAZAVQ6os— Deadly Kalesh (@Deadlykalesh) September 17, 2025
விபத்தில் கார் மிகுந்த சேதத்தைச் சந்தித்துள்ளது. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதே மகிழ்ச்சிக்குரியது. விபத்துக்குப் பிறகு, கிராம மக்கள் காவல்துறையையும், மீட்பு பணியாளர்களையும் தொடர்பு கொண்டு, காரை மீட்க உதவினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
