
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் விஜயலட்சுமி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். அப்போது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், தனுஷ் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் என மூன்று பேரும் இணைந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில் பணம் சம்பாதிக்க முடிவு செய்து செயின் பறிப்பு வீடியோக்களை மூன்று பேரும் யூடியூப்பில் பார்த்து அது போலவே குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக மூன்று பேரும் இணைந்து ஐந்து இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 10 பவுன் மதிப்புள்ள மூன்று தங்கைகள், ஒரு கவரிங் செயின், ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.