நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்துள்ளது. யுபிஐ எனப்படும் பண பரிமாற்ற வசதியின் வாயிலாக உடனுக்குடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பணபரிமாற்றம் செய்துகொள்ள முடியும். கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் யுபிஐ பணப் பரிவர்த்தனை செய்வதில் முன்னிலையில் இருக்கிறது. இதன் வாயிலாக நாம் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப மற்றும் பெற முடியும்.

அந்த அடிப்படையில் இப்போது யூனிஃபைட் பேமென்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) வாயிலாக டிசம்பரில் ரூபாய்.12.82 லட்சம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது. இதன் பொது பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையானது 782 கோடியை எட்டியது. இது தொடர்பாக நிதிச்சேவைகள் துறை டுவிட் ஒன்று செய்துள்ளது. அந்த அடிப்படையில் நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட் புரட்சியை கொண்டு வருவதில் UPI பெரும் பங்களிப்பை கொண்டு உள்ளது.

2022ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் 782 கோடியை தாண்டி மொத்தம் ரூபாய்.12.82 லட்சம் கோடியாக இருக்கிறது. இதனிடையில் அக்டோபர் மாதத்ததில் யுபிஐ வாயிலாக பணம் செலுத்துவது ரூபாய்.12 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.

நவம்பர் மாதத்தில் மட்டும் 730.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. அதன் மதிப்பு ரூபாய்.11.90 லட்சம் கோடி ஆகும். மேலும் தற்போதுவரை 381 வங்கிகள் இவ்வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்பைஸ் மணி நிறுவனர் திலீப் மோடி கூறியதாவது, சென்ற ஓராண்டில் UPI பரிவர்த்தனைகள் எண்ணிக்கை மற்றும் மதிப்பு இரண்டிலும் மிகவேகமாக வளர்ந்துள்ளது என்று கூறினார்.