அரியானா மாநிலத்தின் விளையாட்டு துறை மந்திரி சந்தீப் சிங் மீது தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த பாலியல் புகாரின் அடிப்படையில் மந்திரி சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்று கூறிய மந்திரி சந்தீப் சிங் தன்னுடைய அமைச்சர் பதவியை முதல்வரிடம் ஒப்படைத்து விட்டார்.

ஆனால் மந்திரி சபையில் இருந்து அவர் விலகவில்லை. இந்நிலையில் பாலியல் புகார் கொடுத்த பெண்மணி தனக்கு அடிக்கடி மிரட்டல் வருவதாகவும், தொடர்ந்து போலீசார் அழுத்தம் கொடுத்து வருவதோடு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போ மாதம் 1 கோடி ரூபாய் தருவதாக கூறுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் வழக்கறிஞர் கூறும்போது மந்திரி சந்தீப் சிங் மீது ஒரு முறை கூட விசாரணை நடத்தப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை இதுவரை 4 முறை அழைத்து விசாரணை நடத்தி விட்டார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.