பென்சன் வாங்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் உள்ளோம் என்பதை உறுதிசெய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் ஜீவன் பிரமான் பத்திரம் (அ) டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும். ஓய்வூதியம் பெறும்  நிறுவனத்துக்கு ஓய்வூதியத்திற்குரிய ஆயுள் சான்றிதழ் தேவைப்படுவதால் அதை எவ்வாறு எளிதாக உருவாக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) சில எளிய முறைகளை பரிந்துரைத்து உள்ளது. தற்போது பேஸ் ஆதென்டிகேஷன் வாயிலாக லைப் சர்டிபிகேட் உருவாக்கும் செயல்முறை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

# ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் 5 மெகாபிக்சல் கேமராவை இணையத்துடன் பயன்படுத்த வேண்டும்.

# ஓய்வூதியம் வழங்கக்கூடிய ஆணையத்தில் ஆதார் எண்ணை பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும்.

# AadharFaceRd பயன்பாட்டை பதிவிறக்க வேண்டும்.

# https://jeevanpramaan.gov.in/package/download-ல் இருந்து ஜீவன் பிரமான் ஃபேஸ் ஆதென்டிகேஷனை பதிவிறக்க வேண்டும்.

# பின் ஆபரேட்டர் அங்கீகாரத்தையும், ஆபரேட்டரின் முகத்தையும் ஸ்கேன் செய்ய வேண்டும்.

# ஓய்வூதியம் பெறுபவர்கள் உங்களது விபரங்களை நிரப்ப வேண்டும்.

# அதன்பின் ஃப்ரண்ட் கேமராவில் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.