நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகளில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம். எஸ்பிஐ தொழில்நுட்ப மேம்படுத்தலை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ சேவைகள் தடைபடலாம். இதனை எஸ்பிஐ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதனால் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதியில் பணப் பரிமாற்ற சேவைகளை தொடரலாம்.