சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான் – அமெரிக்கா போரில் இதுவரை இல்லாத ஒரு அதிரடி உண்மையை அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். ஈரானுடனான இந்த மோதலால் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அளவில் பொருளாதார லாபம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாகப் போர்கள் நடந்தால் நாடுகள் பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்திக்கும் நிலையில், டிரம்ப் இப்படிப் பேசியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுத விற்பனை, கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தனது நாட்டின் ராணுவத் தளவாடங்களின் வலிமையை உலகிற்கு நிரூபித்தது ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவிற்குப் பெரும் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாங்கள் எதையும் சும்மா செய்யவில்லை, இந்த யுத்தம் அமெரிக்காவிற்குப் பெரிய ஆதாயத்தைத் தந்துவிட்டது” என டிரம்ப் பேசியிருப்பது, போரில் சிக்கும் சாமானிய மக்களின் உயிர்களை விட லாபமே முக்கியம் என அமெரிக்கா கருதுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
