
இந்தியாவை தோற்கடிப்பவர் உலகக் கோப்பையை வெல்வார் என்று இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் வாகன் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவின் சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஒரு பெரிய கணிப்பு செய்துள்ளார். இந்தூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டிற்கு பதிலளித்த வாகன், “இந்தியாவை வீழ்த்தும் எந்த அணியும் உலகக் கோப்பையை வெல்லும்” என்று கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த 2வது ஒருநாள் போட்டியில் டீம் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆனால் அதே நேரத்தில், அவர்கள் ஐசிசி தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளனர். ஐசிசி தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக மொஹாலியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி குறித்து மைக்கேல் வாகன் கூறியது என்ன?
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் 24ஆம் தேதி ஒரு ட்வீட்டில் இந்தியாவைப் பாராட்டினார். அவர் பாராட்டியது மட்டுமல்லாமல், உலகக் கோப்பையில் இந்திய அணி முன்னேறுவதைத் தடுக்கும் ஒரே காரணி அழுத்தம்தான்” என்றார். அதில், “இது எனக்கு முற்றிலும் தெளிவாக உள்ளது… யார் இந்தியாவை தோற்கடித்தாலும் உலகக் கோப்பையை வெல்வார்கள்… இந்திய ஆடுகளங்களில் டீம் இந்தியாவின் பேட்டிங் ஆதிக்கம் செலுத்துகிறது, மேலும் அவர்களுக்கு அனைத்து பந்துவீச்சு விருப்பங்களும் உள்ளன. சுமையின் அழுத்தம் மட்டுமே அவர்களைத் தடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, லீக் சுற்று போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தும் அணிகளே கோப்பையை வெல்லும் என்று அவர் கூறியதாக எடுத்துக்கொள்ளலாம், அதோடு அவர்கள் அழுத்தத்தில் ஏதேனும் தவறு செய்தால் மட்டுமே மற்ற அணிகளுக்கு வாய்ப்பாக மாறும் என தெரிவித்துள்ளார். அவர்களை யாராலும் வெல்ல முடியும் என்ற ஒரே காரணம் அழுத்தம்தான் என கூறுகிறார்.
It’s quite clear to me .. Whoever beats #India will win the WC .. 👍 #INDvAUS .. India’s batting line up on Indian pitches is ridiculous .. Plus they have all the bowling options covered .. it’s the only the pressure of the burden that could stop them .. 👍
— Michael Vaughan (@MichaelVaughan) September 24, 2023