இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா’ திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பால் உலகளாவிய கவனத்தைப் பெற்றார். இந்தப் படத்தில் அவர் தனது முந்தைய படங்களில் நடித்த நடிகர்களையும் பயன்படுத்தியிருந்தது பலருக்கும் தெரியும். ஆனால், எத்தனை பேருக்குத் தெரியும், இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டியின் மனைவி மற்றும் மகனும் ஒரு சில வினாடிகளுக்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்று! ‘காந்தாரா’வில் முதன்முதலாக காடு சார்ந்த பகுதியில் இருந்து கதாநாயகன் ஊருக்குள் நுழையும் காட்சியின்போது, காவலாளிகளிடம் இருந்து தப்பிக்கும் விதமாக ஒரு தேரைப் பிடித்துச் சண்டையிடுவார்.
அந்தச் சண்டைக் காட்சியில், ரிஷப் ஷெட்டி ஒரு கயிற்றின் மூலம் தேரைச் சுற்றி வந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, தெரியாத்தனமாக ஒரு பெண்ணின் மீதும் அவரது குழந்தையின் மீதும் மோதிவிடுவது போலச் சென்று கயிற்றை விட்டு கீழே விழுவார். அப்போது அவர் எழுந்து, கோபத்துடன் “யார்ரா அந்தப் பொம்பளை?” என்று தமிழில் டப் செய்யப்பட்ட வசனத்தைப் பேசியிருப்பார் (கன்னடத்திலும் அதே தொனியில்தான் கேட்டிருப்பார்). அந்தப் பெண்ணும் குழந்தையும் வேறு யாருமில்லை, அது ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஷெட்டியும், அவரது மகனும் தான்! இந்தக் காட்சி பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், படம் வெளியானதற்குப் பிறகு உற்றுநோக்கிய ரசிகர்கள் இந்தக் குடும்ப கேமியோவைக் கண்டுபிடித்து இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
View this post on Instagram
