
மதுரை மாநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் செல்லூர் ராஜு பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு கண்டிப்பாக தாய்மார்கள் காரணமாக அமைவார்கள். தற்போது அதிமுக கூட்டத்தில் அதிக அளவில் தாய்மார்கள் கலந்து கொள்கிறார்கள்.
பெண் சிசுக்கொலையை தடுத்து நிறுத்திய ஜெயலலிதா பெண்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் போலீசை பார்த்தால் ரவுடிகள் பயப்படுவார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கட்டு விடும் என்ற அச்சத்தில் தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினை யாரவது அப்பான்னு சொல்லுவாங்களா. அப்படி சொன்னா அசிங்கமா போயிடும். அம்மா என்று கூறினால் அவ்வளவு உணர்வு பூர்வமாக இருக்கும். அதே அப்பா என்று கூறினால் அது தவறாக இருக்காதா என்றார்.
முதல்வர் ஸ்டாலின் தன்னை அப்பா என்று தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் அழைப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறிவரும் நிலையில் தமிழகத்தில் அப்பா என்று பிறரை மற்றவர்கள் அழைக்க மாட்டார்கள் என முன்னதாக சி.வி சண்முகம் சர்ச்சையாக பேசிய நிலையில் தற்போது செல்லூர் ராஜு அப்பான்னு யாரையாவது அழைத்தால் அசிங்கமாக போய்விடும் என்று கூறியுள்ளார்.