
இன்றைய டிஜிட்டல் காலத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் மிகவும் அதிகரித்துவிட்டது. இந்த சமூக வலைதளத்தில் பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆபத்தை உணராமல் ஒரு பெண் வீட்டில் வேலை பார்க்கும் வீடியோ வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பெண்மணி கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அடுப்பு கடியில் உள்ள அலமாரியில் குனிந்து ஏதோ ஒரு பொருளை எடுத்த போது திடீரென அவருடைய தலையில் தீப்பிடித்து எரிந்து விட்டது.
அந்த பெண் இதனை நீண்ட நேரமாக கவனிக்காமல் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென தன் தலையில் தீப்பிடித்து எறிந்ததை பார்த்த அந்த பெண் தன் கைகளால் தீயை அணைத்து மிகவும் பதறிவிட்டார். மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/C_dNafOx1gT/?utm_source=ig_web_copy_link