இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் மோகம் என்பது அதிகமாகவே இருக்கிறது. தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் செல்போனில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சில சமயங்களில் செல்போனில் மூழ்கிய நிலையில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை. அதாவது சிங்கப்பூரில் ஒரு பெண் செல்போன் பார்த்தபடியே சாலையை கடந்து சென்றார். அப்போது எதிரே வந்த கார் அந்த பெண்ணின் மீது மோதியதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

அந்தப் பெண் சாலையில் வீசப்பட்ட நிலையில் உடனடியாக எழுந்து தன் உடம்பில் உள்ள காயத்தை நினைத்து வருந்தாமல் அவசர அவசரமாக செல்போன் எங்கே என்று தேடுகிறார். அந்த கார் ஓட்டுனர் பதறி போய் கீழே இறங்கி வந்த நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதா என்ன என்று விசாரிக்கும் நிலையில் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் என்னுடைய செல்போன் எங்கே எங்கே என்று பதறிப் போய் தேடுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.