அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டியுள்ளார். பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த நண்பர் என்றும், அவர் இந்தியாவில் அபாரமான மற்றும் சிறப்பான பணிகளைச் செய்து வருவதாகவும் டிரம்ப் செய்தியாளர்களிடம் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் உலக அளவில் பல்வேறு பிராந்திய பதற்றங்கள் மற்றும் மேற்கு ஆசியப் போர் சூழல்கள் நிலவி வரும் நிலையில், இந்தியப் பிரதமரின் தலைமைத்துவத்தைப் பாராட்டி டிரம்ப் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள் சர்வதேச அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

முன்னதாக, இரு தலைவர்களும் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த உரையாடலின் போது மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை மற்றும் ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளைத் திறந்து வைப்பதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனால் அனைத்துத் துறைகளிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடியும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.