சைபர் குற்றவாளிகள் செயலிழந்த (Inactive) சிம் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்குடன், மத்திய அரசு ஒரு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, ஒரு மொபைலில் ஆக்டிவ் சிம் கார்டு இல்லாவிட்டால், அந்த மொபைலில் இயங்கும் வாட்ஸ்அப் கணக்கு இயங்காது. இந்த விதிமுறை டெலிகிராம், சிக்னல் போன்ற பிற தகவல் தொடர்பு செயலிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயனரின் சிம் கார்டு செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதைச் சம்பந்தப்பட்ட செயலி 90 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்றும், வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) தானாகவே 6 மணி நேரத்திற்கு ஒருமுறை லாக் அவுட் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
